நீங்கள் முறையற்ற மாதவிடாய் பாதிப்பை சந்தித்து வருபவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கஷாயம் செய்து குடிங்க.
முறையற்ற மாதவிடாய் காரணங்கள்:
*PCOS பிரச்சனை
*ஊட்டச்சத்து குறைபாடு
*தைராய்டு பாதிப்பு
*உடல் பருமன்
*நீர்க்கட்டி
*ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
முறையற்ற மாதவிடாய் பாதிப்பை சரி செய்யும் பானங்கள்:
தேவையான பொருட்கள்:-
1)எள் – 25 கிராம்
2)தண்ணீர் – 500 மில்லி லிட்டர்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் 25 கிராம் அளவிற்கு எள் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
2.மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த எள் ஊறவைத்த பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் 300 மில்லி தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
3.எள் பானம் 500 மில்லியில் இருந்து 300 மில்லியாக வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
4.பிறகு இந்த பானத்தை ஆறவைத்து வடித்து குடித்தால் பல மாதங்களாக வராத மாதவிடாயும் ஒரே நாளில் வந்துவிடும்.
முறையற்ற மாதவிடாயை சரி செய்யும் குமரி கஷாயம்:
தேவையான பொருட்கள்:-
1)அசோகப்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
2)கரிய போளம் – சிறிதளவு
3)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
1.அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
2.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அசோகப்பட்டை பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு கரிய போளம் சேர்த்து கஷாயம் போல் செய்து பருகினால் நாள்பட்ட மாதவிடாய் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி – ஒரு துண்டு
2)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
4)கருப்பட்டி – மூன்று தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து இடித்த இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3.பிறகு ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி விதையை உரலில் போட்டு இடித்து இஞ்சி தண்ணீரில் சேர்த்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் முக்கால் கிளாஸாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
4.பிறகு மூன்று தேக்கரண்டி அளவு கருப்பட்டி சேர்த்து கலந்து வடிகட்டி பருகினால் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.