Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகள்!

  1. வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது.

    இந்த லாக்டவுன் நாட்களில் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதால் பலரும் வீடுகளிலேயே வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சிகளை செய்து வந்தனர். அதை உடற்பயிற்சி நிலையங்கள் திறந்த பின்னரும் பின்பற்றி வருகின்றனர். அப்படி வீட்டில் செய்வோர் பலரும் பொதுவாக செய்யும் சில தவறுகள் என்னென்ன பார்க்கலாம்.

    வார்ம் அப் : உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்வது அவசியம். எடுத்தவுடன் பயிற்சியில் இறங்காமல் சில ஸ்ட்ரெட்சுகள் செய்வதால் உடல் நீங்கள் செய்யப்போகும் உடற்பயிற்சிக்குத் தயாராகும்.

    திட்டங்கள் : உடற்பயிற்சி செய்யும் முன் எந்த மாதிரியான பயிற்சிகளை எடுக்கப் போகிறீர்கள், எத்தனை மணி நேரம் செய்யப் போகிறீர்கள், எந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி செய்யப்போகிறீர்கள் என அனைத்தையும் திட்டம் போட்டு அதன் படி செய்தல் நல்லது.

    சரியான பயிற்சி : வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது. எனவே அந்த பயிற்சி நிலையை சரியாக செய்து வந்தால்தான் நன்மை கிடைக்கும்.

    சிரமம் : வீட்டில் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுபோல் உடல் எடையைக் குறைக்க வேண்டிய ஆர்வத்தில் ஒர்க் அவுட், யோகா , நடைபயிற்சி என அனைத்தையும் ஒன்றாக செய்வார்கள். அவ்வாறு செய்யாதீர்கள். ஒரு நாளைக்கு ஒன்று என்று செய்யுங்கள். அதேபோல் ஆரம்பத்திலேயே ஹெவியாக செய்யாமல் சிறு சிறு ஒர்க் அவுட் பயிற்சிகளை மேர்கொள்ளுங்கள்.

    கார்டியோவில் மட்டும் கவனம் : பலரும் கார்டியோ பயிற்சி மட்டும் செய்வதால் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என கற்பனைக் கனவு காண்கின்றனர். எனவே அவ்வாறு இல்லாமல் அனைத்து வகையான பயிற்சிகளையும் மேற்கொள்வது உங்களின் ஒட்டுமொத்த உடலிற்கும் நல்லது.
Exit mobile version