Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 வயது சிறுவனிடம் தவறு செய்வது போக்சோவில் வராது! நீதிமன்றம் கூறிய அதிரடி!

Mistaking a 10 year old boy does not come in pocso! Court action!

Mistaking a 10 year old boy does not come in pocso! Court action!

10 வயது சிறுவனிடம் தவறு செய்வது போக்சோவில் வராது! நீதிமன்றம் கூறிய அதிரடி!

கடந்த சில தினங்களுக்கு முன் உடலோடு உடல் உரசினால் தான் போக்சோ பாயும். மற்றபடி ஆடையின்மேல் தொட்டாலோ அல்லது ஆடையின் மேல் தொட்டு வன்புணர்வு செய்தாலோ அது போக்சோவில் வராது என்றும், அது பாலியல் எதிரான வன்கொடுமை சட்டம் இல்லை என்றும், மும்பை ஐகோர்ட்டில் திடீரென ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டை கடுமையாக கண்டித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மாற்றி அறிவித்தது. மேலும் போக்சோ சட்டப்படி உடலோடு உடல் தொடர்பு ஏற்பட்டால் தான் நடவடிக்கை என்று அர்த்தம் இல்லை. பாலியல் வன்கொடுமைகளை நடக்க காரணமே அதுதான் என்றும், அதன் காரணமாக போக்சோ சட்டத்தின் நோக்கத்தில் குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்லக் கூடாது என்றும், அதன் கருத்துக்களை கூறி இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த மாறி ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் தான் மும்பை நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது பத்து வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்ட குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு தண்டனை குறித்து குற்றம் சாட்டப்பட்டவர் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில் வந்த தீர்ப்பு மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டது. மேலும் அவர் 10 வயது சிறுவனுக்கு இருபது ரூபாய் தருவதாக ஆசை காட்டி, அவனுடன் வாய் வழி பாலியல் உறவில் ஈடுபட்டார் என்றும், இதை வெளியே கூறினால் மிகக் கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அவர் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ஐபிசி பிரிவு 377, 506, போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் அந்த நபர் மேல்முறையீடு செய்தார்.

அப்போது அலகாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும், அந்த வழக்கில் இது வராது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் போக்சோ  சட்டம் பிரிவு 5/6 மற்றும் 9 (எம்) பிரிவில் எந்தவிதமான குற்றத்தையும் குற்றம்சாட்டப்பட்டவர் செய்யவில்லை.

ஊடுருவல் பாலியல் கொடுமைதான் என்று அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அனில் குமார் ஓஹா நேற்று இவ்வாறு தீர்ப்பளித்தார்.  போக்சோ சட்டம் நான்கின் படி மோசமான பாலியல் துன்புறுத்தல் வராது. எனவே குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனையை பத்து வருடங்களில் இருந்து ஏழு வருடங்களாக குறைக்கிறேன் என்றும் தீர்ப்பளித்துள்ளார். அலகாபாத் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version