குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மிதுனம்
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 ல் வக்கிரம் ஆகி, 18 – 10 2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
அதேபோல் கடந்த 23-5-2021 ல் மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.
அந்த வகையில், மிதுன ராசிக்கு ஒன்பதாம் இடமான கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுள்ள குரு வக்கிரம் அடைந்துள்ளார்.
பொதுவாக ஒன்பதாம் இடத்தில் குரு, நிறைவான பலன்களை வழங்குவார். மனதுக்கு இனிய சம்பவங்கள் நடக்க வழி வகை செய்வார்.
ஆனால், அதே இடத்தில் வக்கிரம் அடைவதால், இதுவரை நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்கள், அதை தொடர்ந்து அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும்.
அவ்வாறு இல்லாமல், இதுவரை நல்ல பலன்களை பெற முடியாமல் போனவர்களுக்கு, வக்கிர கதியில் இருக்கும் குரு, நல்ல பலன்களை வாரி வழங்குவார்.
பொதுவாக ஒன்பதாம் இடத்து குரு, இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வழி செய்வார்.
இதுவரை போக முடியாமல் இருந்த ஆன்மீக தளங்களுக்கு சென்று வருவதற்கான வாய்புகள் கிடைக்கும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
குருவின் ஐந்தாம் பார்வை ராசியின் மீதே விழுவதால், பல்வேறு நெருக்கடிகளால் துவண்டு போனவர்களின் முகம், இனி மெருகேறும். புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
விரக்தியான சிந்தனையில் ஆழ்ந்து நிம்மதி இழந்தவர்கள், இனி, எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் செயல்பட தொடங்குவார்கள்.
குருவின் ஏழாம் பார்வை, மூன்றாம் இடத்தின் மீது விழுவதால், அரசாங்கம் மற்றும் ஆரசாங்கம் சார்ந்த வேலைகள் சிலருக்கு கிடைக்கும்.
அரசின் மூலம் தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசாங்கத்தின் மூலம் பலருக்கு ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
அதேபோல், குருவின் ஒன்பதாம் பார்வை, ராசியின் ஐந்தாம் இடத்திருக்கு கிடைப்பதால், காதல் மற்றும் காதல் திருமணங்கள் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும்.
விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் பல வெற்றிகளை குவிப்பார்கள்., பங்குச்சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். மனதுக்கு பிடித்த சம்பவங்கள் நிகழும்.
வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி, மிதுன ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களுக்கு அதிபதியான சனி, தற்போது எட்டாம் இடத்தில் இருந்தாலும், மூன்றாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்வை செய்வதால் தொழிலில் சில மாற்றங்கள் உருவாகும்.
தற்போது, சனி பகவான் வக்கிரம் அடைந்துள்ளதால், முடங்கி இருந்த தொழில், மீண்டும் பழைய நிலைக்கு வரும். முடங்கிய பணமும் கைக்கு வரத்தொடங்கும்.
எட்டாம் இடத்து அஷ்டம சனி கொடுத்த இன்னல்கள் அனைத்தும், அது வக்கிரம் அடையும்போது, நல்ல பலன்களை கொடுக்கத் தொடங்கும்.
தொட்டதெல்லாம் நஷ்டம் என்ற நிலை மாறி, இழந்தவை அனைத்தையும், மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதை முறையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கவும்.
சனியின் மூன்றாம் பார்வை பத்தாம் இடத்தின் மீது விழுவதால், இதுவரை, கிடைக்காத வேலை கிடைக்கும், அமையாத தொழில்கள் நல்ல மாதிரியாக அமையும். தடைபட்ட பணிகள் அனைத்தும் வேகம் எடுக்கும்.
சுய தொழிலில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், ஓய்வு ஒழிச்சல் இன்றி, பணியில் மூழ்க வேண்டிய நிலை உருவாகும். தொழில் ரீதியாக பாதிப்பை சந்தித்தவர்களுக்கு சனியின் வக்கிர காலம் சாதகமாக இருக்கும். அதை கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சனியின் ஏழாம் பார்வை ராசிக்கு இரண்டாம் இடத்தின் மீது விழுவதால், இதுவரை இறுக்கமான மனநிலையில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மன நிறைவை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும். அடகு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து சேரும். வசூலாகாத கடன்களும் வசூலாகும்.
சனியின் பத்தாம் பார்வை ராசிக்கு ஐந்தாம் இடத்தில் விழுவதால், நீண்டநாள் குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும் வாய்ப்புகள் உருவாகும்.
மன சஞ்சலத்தில் இருந்த பலருக்கு, மன நிம்மதி தரும் நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். மனதுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதலில் இருந்த இடைவெளி அகலும். பிரிந்தவர்கள் மீண்டும் சேருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ராசிக்கு பனிரண்டாம் இடத்தில் இருக்கும் ராகு, சில வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். தடைபட்ட வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் தொடங்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும்.
ஆறாம் இடத்தில் இருக்கும் கேது, கடன், நோய், வழக்கு போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பார். எனினும், வேளா வேளைக்கு உணவு அருந்த முடியாத நிலை உருவாகும். அவற்றை சரி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.
இதுவரை, கோச்சார குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும்.
பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.
எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 ரிஷபம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கடகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கன்னி
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 விருச்சிகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 தனுசு
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4