குழந்தைகளை அதிக சிரமப்படுத்தும் நோயான வறட்டு இருமலால் உடல் சோர்வு,தொண்டை வலி,தொண்டைப்புண் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கின்றனர்.இந்த வறட்டு இருமல் குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
தீர்வு 01:
1.இஞ்சி
2.தேன்
3.எலுமிச்சை சாறு
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறை மட்டும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை இஞ்சி சாற்றில் மிக்ஸ் செய்து 20 மில்லி அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வறட்டு இருமலுக்கு உடனடி பலன் கிடைக்கும்.
தீர்வு 02:
1.உலர் திராட்சை
2.வெல்லம்
ஒரு பாத்திரத்தில் 20 உலர் திராட்சை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு 20 கிராம் வெல்லத்தை பொடி செய்து அதில் சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.பிறகு இதை ஆறவிட்டு குழந்தைகளுக்கு 20 மில்லி அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
தீர்வு 03:
1.மாதுளை
2.இஞ்சி சாறு
3.தேன்
ஒரு கிண்ணத்தில் 25 மில்லி மாதுளை சாறு,10 மில்லி இஞ்சி சாறு மற்றும் அரை தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.இதனால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
தீர்வு 04:
1.திப்பிலி
2.தேன்
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் திப்பிலி பொடி 50 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் 10 கிராம் திப்பிலி பொடி மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து கொடுத்தால் குழந்தையின் வறட்டு இருமல் சரியாகும்.
தீர்வு 05:
1.சின்ன வெங்காயம்
2.வெள்ளை சர்க்கரை
150 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தண்ணீரில் போட்டு கழுவவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக்கவும்.இதை ஒரு காட்டன் துணியில் போட்டு ஒரு கிண்ணத்தில் சாறு பிழியவும்.
;பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 கிராம் சர்க்கரை மற்றும் வெங்காயச் சாற்றை சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி ஆறவிட்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வறட்டு இருமல் நீங்கும்.