எலுமிச்சை சாறை இந்த பொருளுடன் கலந்து குடித்து வாருங்கள்! உடலில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு!

0
140

எலுமிச்சை சாறை இந்த பொருளுடன் கலந்து குடித்து வாருங்கள்! உடலில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு!

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து பருகி வருவதன் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அன்றாடம் வாழ்வில் தினசரி நாம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் இருந்து நமக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

அதில் ஒன்று எலுமிச்சை ஆகும். எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளை நன்றாக செரித்து உடலில் கெட்ட கழிவுகள் தேங்காதவாறு பாதுகாக்கிறது. இஞ்சியை மைய அரைத்து சாப்பிட்டாலோ அல்லது இஞ்சி டீ போட்டு குடித்தாலும் உடம்பில் உள்ள கெட்ட கழிவுகள் நீங்கும்.

நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி கருவேப்பிலை சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து அதனை வடிகட்டி தேன் கலந்து குடித்து வருவதன் மூலமாகவும் உடம்பில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறிவிடும். சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதனால் உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நாம் சாப்பிடும் உணவில் ஆர்கானிக் முறையில் கிடைக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது ஆகும். கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் பயன்படுகிறது. சதைப் பற்றுள்ள பகுதியை மட்டும் எடுத்து சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வருவதன் மூலமாகவும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

எலுமிச்சம் பழச்சாற்றினை நாம் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள கெட்ட கழிவுகளையும் வெளியேற்றுகிறது. உணவுகளை செரிக்கவும் உதவுகிறது.உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் எலுமிச்சம் பழம் சாற்று ஒரு நாளைக்கு ஒரு வேளை பருகி வருவதன் மூலமாகவும் நம் உடலுக்கு பல வகையான நன்மைகள் ஏற்படுகிறது.