பல் ஈறுகளில் ஏற்படும் வலியை நிமிடத்தில் போக்க.. தேங்காய் எண்ணெயில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்!
ஆரோக்கியமற்ற உணவுமுறை, பற்களை பராமரிக்காமல் விடுதல், இனிப்பு உணவுகள், குளிர்ந்த உணவுகள் உண்ணுதல்.. போன்ற பல காரணங்களால் பல் ஈறுகளில் வலி, இரத்த கசிவு ஏற்படுகிறது. இதனால் ஆரோக்கியமான பற்களை இழக்கும் சூழ்நிலை உருவாகிறது.
இதை குணப்படுத்திக் கொள்ள மருத்துவரை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காணுங்கள்.
1)எலுமிச்சை தோல்
2)தேங்காய் எண்ணெய்
3)தூள் உப்பு
4)கிராம்பு
5)மஞ்சள் தூள்
6)பட்டை
இரண்டு அல்லது மூன்று எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காயவைக்வும். இந்த தோல் நன்கு காய்ந்த பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
பிறகு 10 முதல் 15 கிராம்பு, 1 துண்டு பட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்த எலுமிச்சம் பொடி, கிராம்பு + பட்டை பொடியை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து கலந்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை…
ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடி 1 தேக்கரண்டி அளவு சேர்த்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு குழைத்து கொள்ளவும்.
காலை மற்றும் இரவு என இரு நேரங்களில் இந்த பேஸ்டை வைத்து பல் ஈறுகளை தேய்த்து சுத்தம் செய்து வந்தால் ஈறுகளில் இரத்தம் கசிதல், வீக்கம், வலி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு அவை வலுப்பெறும்.