தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலும் பருவநிலை மாற்றம் காரணமாக பலரும் சளி,காய்ச்சல்,இருமல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சளி தொந்தரவு நீங்க தேங்காய் பாலில் சில பொருட்களை கலந்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப்
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)சுக்கு – ஒரு துண்டு
4)ஏலக்காய் – ஒன்று
5)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்ஸரை ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.
2.இந்த தேங்காய் பால் நன்கு அரைபட்டு வந்ததும் இதனை ஒரு காட்டன் துணியில் ஊற்றி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பில்டர் பயன்படுத்தியும் தேங்காய் பால் எடுக்கலாம்.
3.பின்னர் கால் தேக்கரண்டி மிளகை வாணலியில் போட்டு வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4.அதேபோல் ஒரு பீஸ் சுக்கை நெருப்பில் வாட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
5.அடுத்து அரைத்த தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் கரு மிளகுத் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
6.பின்னர் அதில் அரைத்த சுக்குத் தூள் சேர்க்க வேண்டும்.பின்னர் ஒரு ஏலக்காயை இடித்து அதில் சேர்க்க வேண்டும்.
7.அதன் பிறகு தேன் சேர்த்து பருக வேண்டும்.இதை தொடர்ந்து மூன்று தினங்கள் பருகி வந்தால் நெஞ்சு சளி கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப்
2)துளசி இலைகள் – இரண்டு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.தேங்காய் மூடியில் இருந்து பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பால் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
2.பின்னர் இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு தேக்கரண்டி துளசி இலையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பின்னர் அரைத்த தேங்காய் பாலை எடுத்து துளசி இலை சாறு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி பருகினால் நெஞ்சில் அடைபட்டு கிடக்கும் சளி கரைந்து வந்துவிடும்.