நுரையீரலில் உள்ள சளி கிருமிகள் அழுக்குகள் அடித்துக் கொண்டு வெளியேற இந்த பொடியை பாலில் கலந்து குடியுங்கள்!!

0
203
Mix this powder with milk and drink it to get rid of the mucus germs in the lungs!!

நுரையீரலில் உள்ள சளி கிருமிகள் அழுக்குகள் அடித்துக் கொண்டு வெளியேற இந்த பொடியை பாலில் கலந்து குடியுங்கள்!!

இன்றைய உலகில் காற்றுமாசுபடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலின் ஆரோக்கியம் மெல்ல மெல்ல கெடுகிறது.

அதேபோல் காலநிலை மாற்றம் காரணமாக நுரையீரலில் சளி உருவாகி அவை தீராத தொல்லையை கொடுக்கிறது.இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.எனவே நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி
2)ஆடாதோடை
3)இஞ்சி
4)அதிமதுரம்
5)மஞ்சள் கிழங்கு
6)திப்பிலி
7)தூதுவளை இலை
8)மிளகு

செய்முறை:-

100 கிராம் துளசி,25 கிராம் ஆடாதோடை இலை மற்றும் 50 கிராம் தூதுவளை இலையை வெயிலில் நன்கு உலர்த்தி மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

அதேபோல் 5 திப்பிலி மற்றும் 10 மிளகை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடிகளை போட்டு நன்கு மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

இந்த பானத்தை காலை உணவு சாப்பிடுவதற்கு முன்னர் மற்றும் இரவு உறக்கத்திற்கு முன்னர் குடித்து வந்தால் நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி,தொற்று கிருமிகள்,அழுக்குகள் முழுமையாக அடித்துக் கொண்டு வெளியேறும்.

அதேபோல் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து கசாயம் செய்து குடித்து வந்தால் நுரையீரலில் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக அகலும்.