மூச்சு பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்க கஞ்சியில் இந்த பொருளை கலந்து முதுகில் தடவுங்கள்!!

0
65

உங்களில் பலர் மூச்சு பிடிப்பு பாதிப்பை சந்திருப்பீர்கள்.மூச்சு பிடிப்பு ஏற்பட்டால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.அதிக எடை உள்ள பொருளை தூக்கினால் மூச்சு பிடிப்பு பிரச்சனை ஏற்படும்.

 

அதேபோல் செரிமானப் பிரச்சனை,சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கும் மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் மூலம் மூச்சு பிடிப்பை சரி செய்யலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

*சூடம்(கற்பூரம்) – இரண்டு

*சுக்கு – ஒரு துண்டு

*சாம்பிராணி – ஒரு கட்டி

*பெருங்காயம் – கால் தேக்கரண்டி

*வடித்த கஞ்சி – அரை கப்

 

செய்முறை விளக்கம்:

 

1.முதலில் சாதம் வடித்த கஞ்சி அரை கப் அளவிற்கு எடுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.

 

2.பிறகு பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் அதாவது சூடம் இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்து இடித்து தூளாக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை எடுத்து வைத்துள்ள கஞ்சியில் கலந்து கொள்ளுங்கள்.

 

3.அடுத்து ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி இடித்து தூளாக்கி வடித்த கஞ்சியில் கலக்கவும்.

 

4.பிறகு ஒரு கட்டி சாம்பிராணியை இடித்து தூளாக்கி அதில் போட்டு கலக்கவும்.இறுதியாக கால் தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து மூச்சு பிடிப்பு உள்ள இடத்தில் பூசிவிடவும்.

 

5.இவ்வாறு தினமும் காலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளையும் செய்து வந்தால் ஓரிரு தினங்களில் மூச்சுப் பிடிப்பு குணமாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

*தண்ணீர் – ஒரு கப்

*காட்டன் துணி – ஒன்று

 

செய்முறை விளக்கம்:

 

1.முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை இறக்கி கொள்ளுங்கள்.

 

2.பிறகு காட்டன் துணி ஒன்றை எடுத்து சூடான நீரில் போட்டு பிழிந்து மூச்சுபே பிடிப்பு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை சீக்கிரம் சரியாகிவிடும்.

 

தேவையான பொருட்கள்:

 

*எப்சம் உப்பு – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

1.வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த நீரை கொண்டு குளியல் போடவும்.

 

2.இவ்வாறு தினமும் செய்து வந்தால் மூச்சுப் பிடிப்பு முழுமையாக குணமாகும்.