ஆயுர்வேத மூலிகை பொருட்களில் ஒன்றாக இலவங்கபட்டையில் ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியிருக்கிறது.இந்த இலவங்கப்பட்டை பிரியாணி சமைக்க மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த பட்டையில் டீ செய்து குடித்தலோ,பட்டை பால் குடித்து குடித்து வந்தாலோ ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.புற்றுநோய்,எடை இழப்பு,சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.
பட்டை பால் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
1)பசும் பால்
2)பட்டை
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு துண்டு பட்டையை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள்.உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் பட்டையை போட்டு பொடியாக்கி கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி பட்டை பொடி போட்டு கலந்து கொள்ளவும்.
பிறகு இனிப்பு சுவைக்காக சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.இந்த பட்டை பாலை ரெகுலரா சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.இதயம் ஆரோக்கியமாக இருக்க கொழுப்பை குறைக்க பட்டை பால் உதவும்.
இந்த பால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பட்டை பால் அருந்தலாம்.பட்டையில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது.இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டப்பட தினமும் ஒரு ஸ்பூன் பட்டை பொடி சாப்பிடலாம்.உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால் பட்டையை மென்று சாப்பிடலாம்.பட்டை சாப்பிடுவதால் செரிமான கோளாறு நீங்கும்.வாந்தி,குமட்டல் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள பட்டை கலந்த பால் பருகலாம்.