தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை?

0
173

தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை?

பருவ மழை பெய்தது என்பது போய் பருவ மழை பொய்த்தது என்றாகி விட்டது இன்றைய நம் நிலை. இதற்கு முழுமுதற் காரணம் நம்முடைய அஜாக்கிரதை தான். ‘மழைநீர் நம் உயிர் நீர்’ ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வாசகங்களை தினம்தினம் பார்த்தாலும் ‘மரம் வெட்டுவோம் மழை ஒழிப்போம்’ என்ற உறுதியோடு வாழ்ந்து வருகின்றோம். எவ்வளவுதான் காடுகள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கடைசியில் ரியல் எஸ்டேட் எனும் புயல் காடுகளை சமாதியாக்குவதில் தீவிர முனைப்போடு இருந்து கொண்டு வருகிறது என்பதே நிதர்சனம்.

மழைநீரின் சிறப்பை உணர்ந்த திருவள்ளுவர் ‘வான்சிறப்பு’ என்ற அதிகாரத்தில் அதன் சிறப்பைப் பற்றி கூறுகிறார். ஆயிரக்கணக்கான ஏரிகளை ஏற்படுத்தின தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜன் “ஏரிகளை பாதுகாக்கும் பாதத்துகள்களை என் தலையில் ஏந்துவேன்” என்று கூறி நீரின் முக்கியத்துவத்தை தன் வார்த்தையில் வெளிப்படுத்தினார்.

இன்று மரமும் இல்லை, நீரும் இல்லை, நீர் மேலாண்மையும் இல்லை என்றாகிக் கொண்டு வருகிறது. ஆனாலும் நமக்கு அடுத்து வரும் சந்ததிக்கு குறைந்த பட்சம் குடிக்கவாவது நீரை வைத்துச் செல்வோம் என்று எண்ணத்தில் இன்றைய தலைமுறையினர் ஓரளவு மரம் வளர்ப்பில் முனைப்பும் காட்ட தொடங்கி விட்டனர் என்றே கூறலாம்.

இதற்கு மேல் நாம் மரம் வைத்து அதை வளர்த்து மழை பெறுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும் என்று எண்ணத்தை மாற்றி ஒரு மரத்திற்கு இரண்டே வருடத்தில் பத்து வருட மரத்தின் வளர்ச்சியைக் கொடுப்பதுதான் இந்த மியோவாக்கி முறை.

2 வருடத்தில் 10 வருட வளர்ச்சியா..? இதெல்லாம் சாத்தியமா..? என்பவர்களின் கேள்விகளுக்கு சாத்தியம் என்று பதில் கூறுகிறார் ஜப்பானைச் சார்ந்த ‘அகிராமியோவாக்கி’.

இம்முறைப்பற்றி அவர் கூறியதாவது, ஒரு குறிப்பிட்ட காலி இடத்தைத் தெரிந்து கொண்டு அதில் மூன்று முதல் மூன்றரை அடி வரை குழியைத் தோண்டி வீட்டுக்காய்கறிக்கழிவுகள், மரத்தூள், சாணம் போன்ற நமக்கு கிடைக்கும் அனைத்து வகையான மக்கும் குப்பைகளையும் போட்டு பின்னர் மிகக்குறைந்த இடைவெளியில் மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு நடுவதன் மூலம் குப்பையிலுள்ள நுண்ணுயிரிகளின் கழிவுகள் செடிகளின் வேர்களுக்கு ஊக்கமளித்து வளர்ச்சியைத் தூண்டுகிறது.

மேலும் செடிகள் அதிக இடைவெளி இன்றி மிக நெருக்கமாக இருப்பதால் ஒளிச் சேர்க்கைக்கு சூரிய ஒளியைப்பெற முண்டியடித்து முன் வந்து போட்டி போட்டு வளர்ந்துவரும். இம்முறை மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக மரங்கள் வளர்க்க முடியும்; ஒரு குட்டி காட்டை நீங்கள் உருவாக்க முடியும் என்றாலும் மிகையாகாது.

இதன்மூலம் காடுகள் உருவாகும்; மழை பெறுகும்; நம் சந்ததிகள் நீராதாரம் மேம்படும்; குப்பைகள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறையும். என்ன நீங்களும் ஒரு குட்டி காட்டை உருவாக்க தயாராகி விட்டீர்கள் தானே..??

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்