அழகிரியின் தந்திர செயல்!

0
129

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக நாளை பதவி ஏற்க இருக்கிறார். நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் ஒருமனதாக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் போன்றவற்றை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். நாளை காலை 9 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களும், சட்டசபை உறுப்பினர்களும், மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழக முதலமைச்சராக பதவியேற்க இருக்கின்ற ஸ்டாலினுக்கு அழகிரி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முதல்வராக இருக்கின்ற ஸ்டாலினை பார்த்து நான் பெருமைப்படுகிறேன் .என்னுடைய தம்பியான ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயமாக நல்ல ஆட்சியை தருவார் என்று அழகிரி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் தேர்தலுக்கு முன்பு வரையில் எதிர்வரும் தேர்தலில் நிச்சயமாக ஸ்டாலினை நான் தோற்கடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தெரிந்தவர் தான் அழகிரி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர் தன்னுடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். ஆனால் அதற்கு ஸ்டாலின் சம்மதிக்காததால் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார் அழகிரி.

அதோடு அழகிரி மீண்டும் கட்சியில் தனக்கு ஏதாவது ஒரு முக்கிய பொறுப்பு வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க அதையும் ஏற்க மறுத்துவிட்டார் ஸ்டாலின். இந்த நிலையில்தான் தேர்தலுக்கு முன்பு அழகிரி தனது ஆதரவாளர்களை மதுரையில் ஒன்று திரட்டி ஒரு மாநாட்டை நடத்தினார். அதில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்து இருந்தது.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியில் அமர இருக்கிறது. இனி நம்முடைய வேலை எதுவும் எடுபடாது என்பதை தெரிந்து கொண்ட அழகிரி எப்படியாவது கட்சியில் முக்கியத்துவம் பெற்று விட வேண்டும் என்ற காரணத்திற்காகவே தற்சமயம் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாக ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள்.a