சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியாக திமுகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவருடைய ஒரே குறிக்கோள் எப்படியாவது எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பதுதான்.
அந்தக் குறிக்கோளை மனதில் வைத்துதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இப்பொழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல திமுக தலைமையும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும் ஒன்றிணைவோம் என்ற பெயரில் அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளும் அதிமுக திமுக என்று ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்ற அளவிற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்பானது அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதன் காரணமாக, தமிழக மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பதா திமுகவிற்கு வாக்களிப்பதா என்ற ஒரு குழப்பத்தில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தற்சமயம் திமுக பல்வேறு வாக்குறுதிகளை தேர்தலை மனதில் வைத்து கொடுத்திருந்தாலும், மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கலைய தொடங்கியிருக்கிறார். அதோடு சாதாரண மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து அவர் செயல்படுவது தமிழக மக்கள் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்று இருப்பதாக சொல்கிறார்கள்.
அதோடு சமீபத்தில் ஒரு தொகுதியில் திமுக சார்பாக செய்யப்பட்ட சுவர் விளம்பரம் ஒன்றில் 110 ரூபாய்க்கு மதுபானம் வழங்கப்படும் வாக்களியுங்கள் என்று எழுதியிருந்தது. தமிழக மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு திமுக சார்பாக கண்டனம் தெரிவிக்கப்படும் அதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க பத்திரிக்கையாளர்களும்,அரசியல் விமர்சகர்களும் இதனை வேறு மாதிரியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தற்போது இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த தேர்தல் அறிக்கையில் வந்திருக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த அவர்கள் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது நூலிழை அளவு தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
காரணம் அந்த அளவிற்கு நீயா நானா என்று இரு கட்சிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழக மக்களுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். இவர்கள் வாக்குறுதிகளை கொடுத்து இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை இதுவரையில் யாரும் யோசித்ததாக தெரியவில்லை.
அதேவேளையில், திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அதிமுக மீது சற்று அதிகமாகவே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காரணம் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்குப் பின்னர் எப்படி செயல்படுவார் என்று மக்கள் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் சாட்சாத் அந்த ஜெயலலிதாவின் மறு உருவமாகவே அவர் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
காரணம் அவருடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாயல் அப்படியே தெரிகிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் நடைபெற்ற அதிமுகவின் வேட்பாளர் தேர்வு மற்றும் வேட்பாளர்பட்டியல் போன்றவையாகும்.
அதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் விதமும் ஜெயலலிதாவின் வியூகம் போலவே இருக்கிறதே என்று சொல்கிறார்கள் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் தேர்தல் நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் என்ன தெரிவித்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல அதற்கு சரியான எதிர்வினையாற்ற கூடிய அளவிற்கு தன்னுடைய தேர்தல் அறிக்கையை தயார் செய்து வெளியிடுவது ஜெயலலிதாவின் வழக்கம்.
அதே பாணியை தான் தற்சமயம் எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்து இருக்கின்றார் அதேபோல தேர்தல் சமயத்தில் வேட்பாளர் தேர்விலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் வழியைத்தான் பின்பற்றுகிறார் என்று சொல்லப்படுகிறது. ஒரு தொகுதியை பொறுத்தவரையில் ஒரு வேட்பாளர் இதற்கு முன்னதாக பொதுமக்களிடம் பெரிய அளவில் செல்வாக்குடன் இல்லை என்று தெரியவந்தால் அதிரடியாக அந்த வேட்பாளரை மாற்றிவிட்டு புதியவரை களமிறக்குவதில் ஜெயலலிதா வல்லமை மிக்கவர். அதே பாணியை தான் தற்சமயம் இந்த விஷயத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையாண்டிருக்கிறார்.
இந்தநிலையில், இன்று காலை 10 மணி அளவில் ஆலங்குடி சட்டசபைத் தொகுதிகள் திமுக சார்பாக நிறுத்தப்பட்டிருக்கின்ற வேட்பாளர் மெய்யப்பன் மற்றும் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராமச்சந்திரன் போன்றோருக்கு கீரமங்கலம் பகுதியில் ஒரே இடத்தில் வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்தின் ஈடுபட இருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் அதே பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.இதனைத் தொடர்ந்து திடீரென்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதாக போடப்பட்டிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சாரம் ஆனது மார்ச் மாதம் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.