மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

0
119

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் திமுக தலைவர் ஸ்டாலின் சிகிச்சைக்காக தனி விமானத்தில் லண்டன் புறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

வருடந்தோறும் லண்டனுக்கு சென்று மருத்துவ பரிசோதனையை செய்துகொண்டு இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த வருடம் ஜனவரி மாதம் அவர் லண்டனுக்கு செல்வதாக இருந்தது ஆனாலும் கொரோனா தொற்று அந்த சமயத்தில் வெளிநாடுகளில் அதிக அளவில் இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது அதன் பின்பு ஜூன் மாதத்தில் லண்டன் சென்றாக வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஆனாலும் ஊரடங்கு காரணமாக சர்வதேச விமானங்கள் செயல்படாத காரணத்தால், செல்ல முடியாததாகவும், தனி விமானம் மூலமாக லண்டன் செல்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்க்கப்பட்டதாகவும், தகவல் தெரிவித்தனர். ஆனாலும் இந்த தகவல் உண்மையானது இல்லை என்றும் , தனி விமானம் கேட்டு திமுக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின் சார்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

லண்டன் செல்ல இயலாததால் மருத்துவர்கள் உடைய ஆலோசனைப்படி நடை பயிற்சி சைக்கிள் பயிற்சி என்று உடல் பயிற்சிகளை அதிகப்படுத்தினார் ஸ்டாலின் வெளியூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு காணொளி மூலமாகவே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கொரோனா தொற்றின் தாக்கம் இன்று வரை கூட உறையாத காரணத்தால் ஸ்டாலின் லண்டன் செல்ல இயலாததால் அவருடைய ரத்த மாதிரிகள் போன்றவை சேகரிக்கப்பட்டு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் இங்கே இருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள் இப்போதைக்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது அவர் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தால் ,அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சென்ற ஸ்டாலின் அங்கிருந்து பரிசோதனை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். அவருடன் துரைமுருகன் , டி. ஆர் பாலு மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் இருந்தார்கள்.

ரத்த அழுத்தம் அதிகமான காரணத்தால், அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு இருக்கிறது எனவும் அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை கூறி இருக்கிறார்கள் எனவும், திமுக தலைமை கழகம் தெரிவித்தது. லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார் ஆனாலும் மேல் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய காரணத்தால், ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக லண்டன் செல்ல இருப்பதாக அவர் தனி விமானத்தில் லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.