நலம் விசாரித்த ஸ்டாலின்! நெகிழ்ந்து போன ரஜினிகாந்த்!

0
153

கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 14ஆம் தேதி ஆரம்பமானது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் திரைப்பட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அந்த படக்குழுவினர் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் கூட ,நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தும் ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இன்று பிற்பகல் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதன் காரணமாக .அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் திமுகவின் தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருக்கின்றார் தொலைபேசி மூலமாக உடல் நலம் குறித்து அவர் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.