கருணாநிதியின் பிறந்த நாள்! தொடங்கி வைக்கப்படும் முக்கிய நலத்திட்டங்கள்!

0
123

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், நோய்த்தொற்று பரவால்ல அதிகரிப்பதை எடுத்து கடந்த 24 ஆம் தேதியிலிருந்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.. இந்த முழு ஊரடங்கு காரணமாக, பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறது. பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதன் காரணமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நோய்த்தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு நிவாரண நிதி கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று நிவாரண நிதியின் முதல் தவணை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த மாதமும் அந்த தொகையை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து நோய்த்தொற்று நிவாரண நிதியாக இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், நோய்தொற்று நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம், போன்றவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.