தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிலையில், பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
இதற்கிடையே நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் 125 திமுக எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 133 சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து உரிமை கோரினார். ஸ்டாலின் 133 ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம் அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார். அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கி இருக்கிறார்.
தமிழகத்தில் அமைகிறது திமுக ஆட்சி! ஏழாம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு!
