Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

புதுக்கோட்டை விராச்சிலையில் நேற்று நடைபெற்ற திமுக பிரமுகர் காசிவிசுவநாதன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாமனாரான காசிவிஸ்வநாதனை மணமகன் என்று பேசியதால், சற்றுநேரம் திருமணத்தில் வந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்,. இது சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உண்டாகி வருகிறது,. இந்த சம்பவம் மறைவதற்குள் மேலும் ஒரு உளறல் பேச்சை ஸ்டாலின் பேசி சமூகவலைத்தள வாசிகளுக்கு விருந்து அளித்துள்ளார்.

இன்று திருவள்ளுவர் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யபட்டிருப்பதால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.,

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்,. சிலை அவமதிப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்,. அவர் திருவள்ளுவர் படத்திற்கு காவி வேசம், திருநீறு அணிவித்ததற்கு ஏற்கனவே டிவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தேன். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. இது தொடர்புடையவர்கள் மீது உடனடியாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளுவர் படத்திற்கு காவி வேசம் போட்டு இருப்பதற்கும், சிலை அவமதிப்பிற்கும் தொடர்புள்ளது. திருவள்ளுவரை, பெரியார் என கூறி ஸ்டாலின் உளறியதை கேட்டு அங்கிருந்த திமுகவினரும் செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்,.

நமக்கு ஏன் வம்பு,. தலைவர் எது சொன்னாலும் சரியாக தான் இருக்கும் துண்டு சீட்டு எழுதி கொடுத்தவனை தான் நாம் வெளுத்து வாங்க வேண்டும் என்று திமுகவினர் நினைத்தார்களோ! என்னவோ தெரியவில்லை.

Exit mobile version