தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். இதனால் பொதுமக்களிடையே அவருடைய ஆதரவு பெருகி வருகிறது.
அதோடு அவர் மேற்கொண்டுவரும் பல அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, பொது மக்கள் மனதில் அவர் தனி இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட வியக்கும் விதத்தில் ஒரு சில விஷயங்களை அவர் மேற்கொண்டு வருகிறார், அதோடு நோய் தொற்று தடுப்ப்பிலும் அவருடைய நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதற்கிடையே இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில முதலமைச்சர்களின் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பது தொடர்பாக சி என் எஸ் என்ற அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியதில் நாட்டில் சிறந்த முதலமைச்சராக 5 பேர் தேர்வானார்கள் இதில் முதலிடத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் இரண்டாவது இடத்தை மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிடித்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரு முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார் என்று இந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இந்த கணக்கெடுப்பில் பெற்றிருக்கக் கூடிய புள்ளிகள் 67 என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 29% மக்கள் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்கள். 12% நபர்கள் அவருடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லை என தெரிவித்திருக்கிறார்கள். இந்த கணக்கெடுப்பில் திருப்தி அடைந்தவர்களின் சதவீதத்தில் திருப்தி இல்லை என்ற கருத்தை முன்வைத்வர்களின் எண்ணிக்கையை கழித்தே மீதம் இருப்பவர்கள் நிகர ஆதரவாளர்களாக கணக்கிடப்படுவார்கள்.
அதனடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிகர புள்ளிகள் என்ற அடிப்படையில் 67 புள்ளிகள் பெற்று இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு மிகுந்த முதலமைச்சராக முதலிடம் பெற்று இருக்கிறார். மராட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறார். நான்காவது இடத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களும், ஐந்தாவது இடத்தை அசாம் முதலமைச்சர் ஹேமந்த் சர்மாவும் பிடித்திருக்கிறார்கள் இவ்வாறு அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் இவரை என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறார் என்று நினைத்து நகைத்த நபர்களுக்கு மத்தியில் தன்னை அடுத்தடுத்து நிரூபித்துக் காட்டி கொண்டே இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை பதிவு செய்தது திமுக. அதோடு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே நல்ல ஆதரவும் இருக்கிறது.
இப்படியான ஒரு சூழ்நிலையில் தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் இந்தியாவிலேயே பொது மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கக்கூடிய முதலமைச்சர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது பொதுமக்கள் இடையேயும், திமுகவினர் இடையேயும், மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சொல்லப்போனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிர் இழந்தவுடன் இனி இவ்வளவு மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு முதலமைச்சரை பார்ப்பது கடினம் என்று தான் தமிழகத்தில் அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அதனை பொய்யாக்கும் விதத்தில் தற்சமயம் ஸ்டாலின் அவர்கள் அசுர வளர்ச்சியை கண்டு வருகிறார்.