நாளை முதல் இது அமல்! ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
கொரோனா தொற்றின் 2வது அலையானது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து பலியாகியுள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசாங்கமும் பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் மக்களின் பாதுகாப்பு கருதி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பை தருமே தவிர இது நிரந்தர தீர்ச்வு கிடையாது என அனைத்து மருத்துவர்களும் கூறி வருகின்றனர்.
அந்தவகையில் மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அந்தவகையில் நமது நாட்டில் அதிக அளவு மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குறிப்பாக நமது தமிழ்நாட்டில் தமிழ்புத்தாண்டு அன்று தடுப்பூசி திருவிழாவை தொடங்கினர்.அன்று 45 வயதுக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
அதற்கடுத்து 18 வயது மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனக் கூறினர்.அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையத்தின் வழியே புக் செய்ய வேண்டும் என்றனர்.அவ்வாறு ஒரே நேரத்தில் ஆயிரகணக்கானோர் புக் செய்ததால் இணையம் செயலிழந்தது.புக்கிங் செய்தவர்கள் அனைவரும் ஏமாற்றமே அடைந்தனர்.ஏனென்றால் நமது தமிழ்நாட்டில் அதிகளவு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் அது நடைமுறைக்கு வரவில்லை.இதற்கடுத்து இந்த 18 வயதுக்கு மேற்பட்டோர் செலுத்திக்கொள்ளும் தடுப்பூசி திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைக்க உள்ளார்.