Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன கையில் தருகிறீர்கள் ஊட்டி விடுங்கள்! முதலமைச்சரின் கட்டளையால் நெகிழ்ந்து போன சட்டசபை உறுப்பினர்!

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பாக அனைத்து சமயத் தலைவர்களும் பங்கேற்றபெருவிழா, மழை வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் இருக்கின்ற சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார் என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்றார், இதனையடுத்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. அதன்பிறகு மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது திமுக ஆட்சி மறுபடியும் அந்த அமைந்த சமயத்தில் சிறுபான்மை நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு அனைத்து விதத்திலும் ஏற்றமும், மறுவாழ்வும், வழங்க கூடிய காலமாக திமுக ஆட்சி காலம் ஆரம்பித்து இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் இரக்கமும், கருணையும் இருக்கின்ற அரசுதான் திமுக அரசு 2003-ஆம் வருடம் தமிழக சிறுபான்மை நல்ல பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அதிமுக அரசு முடக்கியது. 2006 ஆம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் அதை மறுபடியும் செயல்பட வைத்தோம். அந்த சாதனை சரித்திரம் தான் தற்போது மறுபடியும் நடந்து வருகின்றது.

பல்வேறு திட்டங்களில் சிறுபான்மை நல ஆணையமும் ஈடுபட ஆரம்பித்து இருக்கிறது, கடந்த பத்து வருடங்களில் பல்வேறு துறைகளில் உண்டாகி இருக்கக்கூடிய பின்னடைவுகளை சரி செய்வதற்காக முயற்சிகளை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். ஐந்து வருடங்கள் செய்ய வேண்டிய சாதனைகளை நாங்கள் ஐந்து மாதங்களில் செய்தோம் என கூறியிருக்கிறார்.

அரசியல் எல்லைகளைத் தாண்டி பொதுவானவர்களாக நாங்கள் இருக்கிறோம் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 500க்கும் அதிகமான வாக்குறுதிகளை வழங்கி, அதில் 300க்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்திருக்கிறோம். நிதிச்சுமை இருந்தாலும் பொது மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை மற்றும் திட்டங்களை எந்தவிதமான தங்குதடையின்றி செய்து வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் தெரிவித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி என்னையும், உங்களையும், ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் நிறைவேற்றிக் காட்டுவோம் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று அவர் உரையாற்றி இருக்கிறார்.

முன்னதாக கேக் வெட்டும் சமயத்தில் இனிகோ இருதயராஜ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேக் கொடுத்தார். அப்போது என்ன கையில் கொடுக்கிறீர்கள்? ஊட்டி விடுங்கள் என்று ஸ்டாலின் அன்பு கலந்த உரிமையில் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனை அடுத்து அவருக்கு இனிகோ இருதயராஜ் ஊட்டிவிட்டதாகவும், சொல்லப்படுகிறது.

Exit mobile version