Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்! கடிதம் எதற்கு தெரியுமா?

மத்திய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள விவசாய மக்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், எதிர்ப்பு அலைகளை உருவாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வேளாண் துறையை பொறுத்தவரையிலும் அரசமைப்பு சட்டப்பிரிவின் படி, தீர்மானம் நிறைவேற்றுவது என்பது மாநிலங்களுக்கே உரிய  அதிகாரமாகும் என்றும் வேளாண் சட்டங்களை, மாநில சட்டமன்றத்தில் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் திமுக ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்திய அரசின் வேளான் சட்டங்களை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் இந்த வேளாண் சட்டங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை ஏற்க முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்காக தமிழக சட்டமன்றத்தை உடனே கூட்டுமாறு மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version