முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சியின் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் 56,20,30,000 மதிப்பிலான முடிவுற்ற 46 திட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தார். 35,42,93000 ரூபாய் மதிப்பீட்டிலான 591 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 13,587 பயனாளிகளுக்கு 157,46, 88000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் உரையாற்றிய அவர் என்னுடைய வாழ்க்கையில் நீ எதையாவது சாதித்து இருக்கிறாயா? என்று கேட்டால் பட்டியல் போடும் போது நிச்சயமாக இடம்பெறும் மகத்தான திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், 3 நகராட்சிகள் 16 பேரூராட்சிகள் மற்றும் 7639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் அளவை மேலும் உயர்த்தும் விதத்தில் இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்ட பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இன்று மட்டுமே 249,5,11,552000 ரூபாய்க்கான நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்திருக்கின்றார். திமுக அரசு என்பது எப்போதும் இதே சுறுசுறுப்புடன் இருக்கும். மே மாதம் இந்த அரசு பொறுப்பேற்றது இந்த ஆறு மாதகாலத்தில் 304 திட்டங்களுக்காக 1,34,902 கோடி ரூபாய் முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்திருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டில் நடப்பது நல்லாட்சி என்பதற்கான உதாரணம் என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரு மாநிலத்தில் ஏராளமான முதலீடுகள் பல்வேறு நிறுவனங்கள் காரணமாக, செய்யப்படுகின்றன என்றால் அந்த மாநிலத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்று அர்த்தம், அந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறது என்று பொருளாகிறது, அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று அர்த்தமாகிறது. அந்த மாநிலம் வளர்ச்சிக்குரிய மாநிலமாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது, அந்த மாநிலத்தில் புதிய நிறுவனத்தை ஆரம்பித்த அந்த நிறுவனம் வளரும் என்றும் அர்த்தமாகிறது என தெரிவித்திருக்கிறார்.
அதைப்போன்ற ஒரு மரியாதையையும், பெருமையையும், திமுக அரசு பெற்றிருக்கும் காரணத்தால் தான் இதுபோன்ற புதிய நிறுவனங்கள் எவ்வளவு பெரிய தொகையை கொண்டு வந்து தமிழகத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது தொழில் சார்ந்து மட்டும் கிடையாது. அது வளர்ச்சியை சார்ந்தது. அது நல்லாட்சியின் அடையாளம் ஆகும். அது போன்ற பெயரை ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்தில் நாம் பெற்றிருக்கிறோம் என கூறியிருக்கிறார். அதுதான் முக்கியமானது 2 வருடங்கள் கழித்து அல்லது 4 வருடங்கள் கழித்து பெயர் வாங்குவதைவிட 6 மாத காலத்தில் பெயர் வாங்குவதுதான் மிக முக்கியமானவை என்று கூறியிருக்கிறார்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது எனக்கு மிகவும் நம்பிக்கை வருகிறது, நம்முடைய தாய் தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக நாம் நிர்மாணிப்போம். அதுவும் மிக விரைவில் நடக்க போகிறது என்ற நம்பிக்கை எனக்கு பிறந்திருக்கிறது என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.