Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா அச்சம் தவிர்ப்போம் ; அறிவியலால் வெல்வோம்! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பிரச்சாரம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை திமுகவினர் வழங்கி வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புறம் சாலைகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக ஒரு மருத்துவகுழு ஒன்று கொரானாவிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பதை மக்களிடம் விளக்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம், முகக்கவசம், சேனிடைசர், சோப்பு ஆகியவை திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.

Exit mobile version