Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் பாஜகவில் இணைந்தார்.இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் விரைவில் அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறி இருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது,அதற்கு மறுப்பு தெரிவித்த அனிதா ராதாகிருஷ்ணன் நான் திமுகவின் விசுவாசமிக்க தொண்டன், அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில்,இன்று காலையில் வெளிவந்த நாளிதழ் ஒன்றில் பொதுசெயலாளர் பதவி கிடைக்காதால் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளார் என்பது போன்ற செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலகத்தை உருவாக்க நான் முனைவதுபோல் ஒரு செய்தி வெளியானது இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நான் எம்.எல்.ஏ, எம்.பி அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல,அண்ணாவின் திராவிட நாடு கொள்கைப் பார்த்து ஒரு போராளியாக 1953 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிப்பட்ட தொண்டனாக இருந்து, இருவண்ண கொடியை பிடித்து கொண்டு கழகத்திற்கு கோஷமிட்டே இருப்பவன்.ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன்.

ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்குவது அமைச்சர்களுக்கு கவரி வீசுவது அதனால் ஆதாயம் பெறுபவர்களுக்கு ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள் எனவே தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று ஒவ்வொருவரும் தன்னிலை விளக்கம் கொடுக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதால் கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின் இருக்கிறாராம்.

Exit mobile version