முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

0
117

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்வி கொள்கை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம்,தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமிழக அரசு உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,புதிய கல்விக் கொள்கை 2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வர்க்கு நன்றி!

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்! என்று கூறியுள்ளார்.