மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் , சில சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள சண்டிவல்லி என்ற பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது. இதை அப்புறப்படுத்த வேண்டிய ஒப்பந்தகாரர் இதனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.
பின்னர், இது தொடர்பாக சிவசேனா எம்எல்ஏ திலிப் லந்தேவின் காதுக்கு சென்றுள்ளது.
இதைக்கேட்டு கொதித்தெழுந்த எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் சண்டிவலி பகுதிக்குச் சென்றார். அங்கு சென்ற எம்எல்ஏ சாக்கடை போகும் வழியை சுத்தப்படுத்தி தங்குதடையின்றி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
இது ஒப்பந்ததாரர் காதுக்கு செல்ல பயந்து போய் உடனடியாக விரைந்து அந்தப் பகுதிக்குச் சென்று உள்ளார். சரியாக தனது வேலையை செய்யாமல் தான் வந்த உடன் வந்த ஒப்பந்ததாரர் பார்த்து ஆத்திரமடைந்த எம்எல்ஏ திலீப், ஒப்பந்தாரரை மிரட்டி சாக்கடையில் தள்ளியதுடன், அவர் மீது சாக்கடை கழிவுகளை வாரி இறைத்து தண்டனை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக எம்எல்ஏ திலீப் லந்தே பேசுகையில், சாக்கடையை நீக்கி தண்ணீர் சுத்தமாக செல்ல பணியை மேற்கொள்ள வேண்டிய கடமை ஒப்பந்ததாரருக்கு உள்ளது. அதை அவர் சரியாக செய்யாததால் உள்ளூர் மக்களுக்கு மிகவும் அவதி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் அவருக்கு புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாக்கடையை சுத்தம் படுத்தவில்லை எனில் இவர்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்டவே இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.