வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

0
92
#image_title

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

ராஜஸ்தானில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வாக்காளர்களின் ஷூக்கலுக்கு பாலிஸ் போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் காலகட்டத்தில் தொடங்கிய இருக்கின்றது. பாஜக கட்சி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி என்று தேர்தலில் நிற்கும் கட்சிகள் சார்பாக தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வாக்காளர்களின் ஷூக்களுக்கு பாலிஸ் போட்டு வாக்கு சேகரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுயேட்சை எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஹூட்லா அவர்கள் செருப்பு தைக்கும் கடையில் செருப்பு தைக்கும் தொழிலாளி போலவே அமர்ந்து வாக்காளர்களின் ஷூக்களுக்கு பாலிஸ் போட்டார். தனக்கு மாலை அணிந்த முதியவர் ஒருவரின் காலணிகளுக்கு சுயேட்சை எம்.எல்.ஏ ஓம்பிரகாஷ் ஹூட்லா அவர்கள் பாலிஸ் செய்வது போன்ற புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்து சுயேட்சை எம்.எல்.ஏ ஓம்பிரகாஷ் ஹூட்லா அவர்கள் “நான் தொகுதி மக்களுக்கான சேவகன் என்பதை உணர்த்துவதற்காகவே ஷூக்கலுக்கு பாலிஸ் போட்டேன்” என்று நெகழ்ச்சியாக கூறியுள்ளார். இதே போல 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுதும் சுயேட்சை எம்.எல்.ஏ ஓம்பிரகாஷ் ஹூட்லா அவர்கள் வாக்காளர்களின் காலணிகளுக்கு பாலிஸ் போட்டு பிரபலமடைந்தார். மேலும் அவர் நின்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.