Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆபாச வீடியோவால் பதறிய MLA!! பணம் பறிப்பு -மாட்டிய பெண்!!

ஆபாச வீடியோவால் பதறிய MLA!! பணம் பறிப்பு -மாட்டிய பெண்!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்.இவர் தற்பொழுது பெரியகுளம் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் தான் திமுக எம்எல்ஏவுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி அவருக்கு மிரட்டல் விடுத்து பணம் பறித்து இருக்கிறார்கள். மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய எம்எல்ஏவுக்கு இந்த கதியா என அரசியல் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்எல்ஏ அவர்களின் செல்போனுக்கு ஒரு வீடியோ கால் வந்திருக்கிறது. புதிய நம்பரில் இருந்து வீடியோ கால் வருவதால் அதனை ஆன் செய்து பார்த்திருக்கிறார்.அப்பொழுது யாருமே பேசவில்லையாம் உடனே போனை கட் பணிவிட்டராம்.

மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து எம்எல்ஏவின் போனுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் அந்த வீடியோ கால் செய்த பெண்ணுடன் எம்எல்ஏ ஆபாசமாக பேசுவது போன்று தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கேட்ட எம்எல்ஏ அவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார். பிறகு அந்த வீடியோ காலில் பேசிய ஒரு மர்ம நபர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இந்த வீடியோவால் பதற்றம் அடைந்த எம்எல்ஏ அந்த மர்ம நபர்களுக்கு அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் முதலில் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

பின்னர் தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு வீடியோவை அனுப்பி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் போலீசார் யார் இந்த ஆபாச வீடியோவை அனுப்பியது என்று விசாரித்து வந்தனர்.இந்த விசாரணையின் முதற்கட்ட தகவலில் ஆபாச வீடியோவை அனுப்பியவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே சைபர் கிரைம் போலீசார் அவர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எம்எல்ஏவிடமே பணம் பறித்த இந்த தகவலை கேட்டு மக்கள் ஆடிப் போய் உள்ளனர். பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Exit mobile version