Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லிக்கு சென்றதால் எம்.எல்.ஏ இடைநீக்கமா? மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக நேற்று காலையில் தகவல் வெளியானது.

திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்த மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால் ,மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த கு.க செல்வம் இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அவர்களுடன் நேற்று டெல்லி சென்றார், மாலையில் பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது திமுக வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மாலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ஜேபி.நட்டாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த பின் கு.க செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியில் நான் சேரவில்லை டெல்லியில் என்னுடைய தொகுதி பிரச்சனைக்காக அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தேன்.ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு நாளைசெல்ல இருக்கும் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன் அயோத்தியில் ராமர்க்கு கோவில் கட்டுவது போல ராமேஸ்வரத்திலும் ஒரு கோவில் கட்டவேண்டும் என்று கூறினேன்.

இந்தியாவில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு இடையூறு ஏற்படுத்தும் ராகுல் காந்தியுடனான உறவை திமுக துண்டிக்க வேண்டும்
திமுகவில் உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் மேலும் தமிழ்கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை முக.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவரும் கு.க செல்வம் திமுக வின் தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து
தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது என அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version