சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

0
173

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார பயணம் குறித்து மக்கள் நீதி மையம் தகவல் தெரிவித்து இருக்கின்றது.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசு கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்தார். மக்கள் நீதி மையத்திற்கு கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

இந்நிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கின்றது மக்கள் நீதி மையம். வேறு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது, மூன்றாவது அணிக்கான தகுதி என்பது எங்களுக்கு இருக்கின்றது என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் கமல்ஹாசன் களமிறங்க இருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இதுதொடர்பாக மக்கள் நீதி மையம் துணை தலைவர் மகேந்திரன் நேற்று வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் சீரமைப்பும் தமிழகத்தை என்ற உன்னதமான நோக்கத்துடன் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் கமல்ஹாசன் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையிலேயே கமல்ஹாசன் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13, 14, 15, 16, ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்த இருக்கின்றார் என்று அறிவித்திருக்கிறார் மகேந்திரன்.

மக்கள் நீதி மையத்தின் அனைத்து நிர்வாகிகளும் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் புத்துணர்வுடன் பங்கேற்று கமல்ஹாசனுடைய சுற்றுப்பயணத்தை சிறப்பிக்க வேண்டும் அனைவரும் தொற்றின் விதிமுறைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் அதை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர், கேட்டுக் கொண்டிருக்கின்றார்.