Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவில் இணைய இருக்கும் மிக முக்கிய நபர்! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய ஒரு முக்கிய புள்ளி திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தவர் மகேந்திரன் இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோயம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதனையடுத்து அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக மகேந்திரன் போட்டியிட்டார். கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார்.

கோயம்புத்தூரில் மகேந்திரன் வாங்கிய வாக்குகள் போன்றவற்றை பார்த்துதான் மக்கள் நீதி மையம் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பி கமல்ஹாசன் சென்னையை ஒதுக்கிவிட்டு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட்டதாக தகவல் கிடைத்தது. ஆனாலும் இந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் மகேந்திரன் தோல்வி பெற்றிருந்தாலும் கூட 36 ஆயிரத்து 855 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கமல்ஹாசனுடன் உண்டான மனக்கசப்பு காரணமாக, துணை தலைவர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மகேந்திரன் விலகிக் கொண்டார். இந்த சூழ்நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. திமுகவில் இணைந்தவுடன் அவருக்கு முக்கிய பதவி வழங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Exit mobile version