Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடமாடும் அம்மா ரேஷன் கடைகள்: அரசாணை வெளியீடு!! தமிழக அரசின் புதிய திட்டம்..!

தமிழகத்தில் 3,501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மேலும், சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் என்ற கணக்கில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன. இதனால் 5 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பலன் அடைவார்கள் என கருதப்படுகிறது.

இதையடுத்து ரேஷன் கடைகள் செயல்படும் இடம், நேரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அரசு கட்டடம், உள்ளாட்சி கட்டடம், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகளை திறக்கலாம்.

இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆகஸ்டு 20-ம் தேதிக்குள் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் அறிக்கை தரவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version