Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் முன்மாதிரி திட்டம்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக உலக வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் இந்த திட்டம் 1702 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது, அதற்கு முதல் கட்டமாக 2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முன்மாதிரி திட்டத்திற்கு ஆலோசகர்களை நியமனம் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நோய் தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை, தொழிற்கல்வி, தன்னிறைவு, வேலைவாய்ப்பு, உள்ளிட்டவை சென்றடைவதை உறுதி செய்தல், இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version