மருத்துவரின் விழிப்புணர்வு நடவடிக்கை களுக்கு மோடி பாராட்டு

0
181

மருத்துவரின் விழிப்புணர்வு
நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு

உலக அளவில் பெரும் மாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் பெயர் கொரோனா. இந்த வைரஸின் பாதிபில் இருந்து மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய அளவில் தினம் தினம் புதுப்புது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரே வழி மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதே.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மக்களிடையே கொண்டு செல்ல டெல்லியை சார்ந்த மருத்துவர் ஒருவர் தனது கையில் பதாகையை ஏந்தியவாறு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.அவர் கையில் உள்ள அந்த பதாகையில் “நாங்கள் உங்களுக்காக சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் எங்களுக்காக வெளியே வராமல் இருங்கள்” என எழுதப்பட்டுள்ளது.

இதனை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது இன்றைக்கு கொரோனோவை அழிக்க போராடும் ஒவ்வொருவரின் செயலையும் எந்த வார்த்தை கொண்டு பாராட்டினாலும் அதற்கு ஈடு இல்லை. அந்த வகையிலே மருத்துவரின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மிகவும் போற்றுதலுக்கு உரியது என பாராட்டு தெரிவித்துள்ளார்.