தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சிபுரிந்து வரும் பாஜக ஆகிய கட்சிகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அனைத்து திட்டங்களையும் குறைகூறி விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதேபோல மாநிலத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுகவையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் எடுத்து வந்தாலும் அதில் குறை கூறுவதையே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை அம்பத்தூர் அருகே இருக்கும் ராக்கி திரையரங்கம் அருகில் அண்ணா நகர் சட்டசபைத் தொகுதி வேட்பாளர் எம் கே மோகன் மதுரவாயல் சட்டசபை தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அம்பத்தூர் சட்டசபை வேட்பாளர் ஜோசப் சாமுவேல் வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதி வேட்பாளர் வெற்றியழகன் போன்றோரை ஆதரித்து தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
திறந்தவெளி காரில் நின்று அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய அவர் எப்போதுமே சென்னை நம்முடைய கோட்டை அந்த சென்னை கோட்டையை கைப்பற்ற தான் முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். தற்போது நடைபெறக்கூடிய ஆட்சியில் தமிழ்நாடு 50 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று விட்டது. இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சென்று தனக்கு கீழ் நடைபெறும் ஆட்சி மிக சிறப்பாக நடக்கிறது என்று தெரிவித்து வருகிறார் என தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
அதோடு மத்திய அரசிடமிருந்து மாநில அரசு தற்சமயம் பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறது பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதன்மை பெற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதனை குறிப்பிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறோம் என்பது போன்று பேசியிருக்கிறார்.ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் தமிழகத்திற்கு எந்த ஒரு விருதும் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.தமிழகத்திலே திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக நடைபெற்ற ஒரு நிகழ்வு செம்மொழி மாநாடு தான் என்று சொல்லப்படுகிறது. அதுவும்கூட திமுக சார்பாக நடைபெற்ற மாநாடு தான் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதோடு அந்த செம்மொழி மாநாடு ஆனது செம்மொழி மாநாடு என்ற பெயரில் திமுக தன்னுடைய குடும்பத்திற்கு நடத்திக்கொண்ட பாராட்டு விழா என்றும் ஒரு கருத்து இருந்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டுப் பேசிய அவர் உங்களுடைய மோடி மஸ்தான் வித்தை தமிழகத்தின் செல்லுபடியாகாது இது தமிழ்நாடு என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல வாக்களிப்பதற்கு முன்னர் மக்கள் சிந்திக்க வேண்டும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமே இந்த தேர்தல் நடைபெறுகிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம் இது நமது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேர்தல் என்று தெரிவித்திருக்கிறார்.
நம்முடைய உரிமைகளை மீட்க வேண்டிய தேர்தல் என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.அதோடு அவர் தெரிவித்திருக்கும் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்திலும் தமிழக இளைஞர்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களும், கேலி கிண்டல்களும் எழுந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.