Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!

பிரதமர் மோடியின் திருக்குறள் பற்றை கூறும் விதமாக பத்திரிகையாளர் மாலன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையை பிரதமர் மோடி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், திருக்குறள் ஒரு சிறந்த ஊக்குவிப்பு தரும் நூல், அதி அற்புதமான நூல், உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்தினை அடக்கிய பொக்கிஷமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருவள்ளுவரின் மற்றொரு பெயரான தெய்வப்புலவர் என்று குறிப்பிட்டு, இவரின் ஒளி பரப்பிடும் கருத்துகள் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படித்து பயன்பெறுவர் என்று நம்புவதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த ட்விட் பதிவை பாஜக கட்சியினர் பலரும் ரீ டுவிட் செய்து வருகின்றனர்.

Exit mobile version