மோடி: இனி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறைக்கு ஒரே மாதிரி சீருடை! பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த ஓர் வழி!

0
146
Modi: uniform uniform for police in all states!

மோடி: இனி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறைக்கு ஒரே மாதிரி சீருடை! பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த ஓர் வழி!

அரியானா மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று பிரதமர் காணொளி மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அந்தந்த மாநிலங்களின் பொறுப்பு ஆகும். அந்த வகையில் காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மேலும் நாட்டின் சட்ட ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒரு மாநிலம் மற்றும் மாநிலத்திற்கு இடையே உள்ள தொடர்பை இணைக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பிற்காக ஒரு மாநிலத்துடன் தொடர்புடையவர்கள் மற்றொரு மாநிலத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.அதேபோல மத்திய அரசு காவல்துறை தொழில்நுட்ப இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. இந்த இயக்கம் இந்தியாவில் உள்ள காவல்துறையை உத்வேகப்படுத்தவும் தொழில்நுட்பம் ரீதியான திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் உதவும். மேலும் கொரோனா காலகட்டத்தில் காவல்துறை, பொதுமக்களுக்கு தங்கள் உயிரை பணையை வைத்தும் உதவி செய்தார்கள்.

அவர்கள் கடமையிலிருந்து ஒருபோதும் தவறவில்லை. தற்பொழுது இந்த தடைய அறிவியல் பல்கலைக்கழகம் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கவும் உதவும். அதுமட்டுமின்றி அடுத்த 25 ஆண்டுகளுக்குள் அமிர்த பீதி உருவாக்கப்படும். இதில் முக்கிய ஐந்து அம்ச தீர்மானங்களான வளர்ந்த இந்தியாவை உருவாக்குதல், பாரம்பரியத்தில் ஒற்றுமை மற்றும் அதன் பெருமை, மூத்த குடிமகன்கள் கடமை என இந்த ஐந்தையும் அமிர்த பீதி மூலம் வெளிக்கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

அதேபோல அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரே சீருடை நிறுவ மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஒரே மாதிரியான சீருடையை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்தால் அனைவருக்கும்  பொதுவான அடையாளத்தை ஏற்படுத்தும். அத்தோடு வேலை வாய்ப்பை ஏற்படுத்த அது முக்கிய பங்கு வகிக்கும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.