முக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!
தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற ஆரம்பித்தது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல எதிர்க்கட்சிகள் எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிராக பல கேள்விகளை அங்குதான் எழுப்புவார்கள். போன வருடம் கூட பெகாசஸ் உளவு விஷயம் குறித்து அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் காரணமாக தற்போது மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் இதுவரை மன்னிப்பு கோரவில்லை. அதன் காரணமாக அவர்களை திரும்பவும் அமர்த்தப்பட முடியாது என்றும் அவை தலைவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இது குறித்து கேட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அதன் காரணமாக மாநிலங்களவை செயல்பட முடியாமல் முடங்கி உள்ளது. எனவே நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய மூத்த மந்திரிகள் உடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். எனவே அதன் காரணமாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல விஷயங்களையும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கலந்தாய்வில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் முக்கியமாக பங்கேற்றனர்.