மோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக!
நாளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் கர்நாடகவிற்கு சென்று சென்னை டு மைசூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கி வைக்க இருக்கிறார். அதனை தொடங்கி வைத்ததும் தனி விமான மூலம் திண்டுக்கல் வர உள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டம் அளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதில் இசைஞானி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் பிரதமர் கையால் வழங்கப்பட உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க உள்ளார்.
இவர்கள் இருவரும் வருவதை தொடர்ந்து பாஜக மற்றும் திமுக உறுப்பினர்கள் திண்டுக்கல் பகுதியில் போட்டி போட்டுக் கொண்டு கட்சி கொடிகளை நட்டு வைத்து வருகின்றனர். இவ்வாறு நெடுஞ்சாலை முழுவதும் ஆங்காங்கே இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு கட்சிக்கொடி நட்டு வைப்பதால் அங்குள்ள பொதுமக்களுக்கு சிரமத்தை அளிக்கிறது.
குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் தரையிறங்கும் ஹெலிபேட் தளம் அருகே திமுகவினர் மற்றும் பாஜகவினர் ஓர் இடம் விடாமல் தொடர்ச்சியாக கொடிகளை நட்டு வைத்துள்ளனர்.
இதனை அகற்றுமாறு போலீசார் இரு தரப்பினரிடமும் கூறியுள்ளார். இருதரப்பினரும் கட்சிக்கொடியை அகற்றாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாஜக ஒரு படிக்கு மேலாக போலீசாரையே தாக்க முன் வந்துவிட்டது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.