மோடி+ஆளுநர்.. இதை மட்டும் இனி கவனியுங்கள்!! பிரஷராகும் பொம்மை முதல்வர்!!  

0
775
Modi+Governor.. Just watch this!! Stalin is the presser!!

மோடி+ஆளுநர்.. இதை மட்டும் இனி கவனியுங்கள்!! பிரஷராகும் பொம்மை முதல்வர்!!

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடந்த வாரம் டெல்லி தலைமையகத்திற்கு சென்று அமித்ஷா மற்றும் மோடியை சந்தித்து வந்ததிலிருந்து ஆளும் கட்சி அவரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றதாம். ஒவ்வொரு ஆளுநரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் தான். அந்த வகையில் நாகலாந்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆர் என் ரவியின் பதவி காலமானது வரும் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

மேற்கொண்டு புதியதாக ஆளுநர் நியமிக்கப்படலாம் அல்லது இவரையே பதவி நீட்டிப்பு செய்யவும் அதிக வாய்ப்புள்ளது. ஆளும் கட்சி மற்றும் ஆளுநர் இருவருக்கும் ஏகா பொருத்தமாக தான் தற்பொழுது வரை இருந்து வருகிறது. அவசர மசோதா உள்ளிட்ட எவற்றிற்கும் ஆளுநர் தற்பொழுது வரை உடனடியாக ஒப்புதல் அளித்ததில்லை. அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு ஆர் என் ரவி வேலை பார்த்து வருவதாகவும் ஆளும் கட்சி கூறி வருகிறது.

இந்நிலையில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் மீது தனி கரிசனை உள்ளதால் இவரது பதவி நீட்டிக்க படலாம் என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி திடீரென்று ஆர் என் ரவி டெல்லி செல்ல என்ன காரணம்? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் ஆளுநரோ,சமீபத்தில் தமிழகத்தில் நடந்து வரும் சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச சென்றதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் மத்திய தலைமையை சந்தித்தது தற்பொழுது ஆளும் கட்சிக்கு இடையூரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏதேனும் புதிய திட்டத்தை ஆளுநர் மூலம் கையாள உள்ளார்களா என்ற பாணியில் திமுக ஆர் என் ரவியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எந்த ஒரு ஆளுநரையும் நேரடியாக தனிப்பட்ட முறையில் மோடி சந்தித்தது கிடையாது. இவரை மட்டும் ஏன் சந்திக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் திமுகவிற்கு வேறு வகையில் ஏதேனும் அழுத்தம் கொடுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.