Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

501ரூபாய் நிவாரண நிதி வழங்கிய ஏழை குடிமகன் : அவரை மோடி என்ன செய்தார் தெரியுமா?

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இதனால் அரசின் உத்தரவை ஏற்று மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அயராது பாடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகமாகி மருத்துவ மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அரசு செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசுக்கு நிதி அளிக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க டாடா, பஜாஜ், பேடிஎம் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் முதல் தனி நபர்கள் வரை பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அவ்வாறு நிதி அளிக்கப்பட்ட அதில் ஒருவர் 501/- ரூபாய் மட்டும் வழங்கி தன்னால் முடிந்தது இவ்வளவு தான் என பிரதமருக்கு ட்விட் செய்திருந்தார்.

இதனை பார்த்த மோடி நிவாரண நிதியில் பெரிது அல்லது சிறிது என்று எதுவும் இல்லை, சிறு துளி தான் பெரு வெள்ளமாக மாறும் அதனால் ஒவ்வொருவரின் பங்களிப்பு தான் முக்கியம் என்று அதில் கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிலை பார்த்த நாட்டு மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்ட பிரதமரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version