மோடியின் ரோடு ஷோ வே பக்கா ஃப்ளாப் இதில் நான் வேறையா”.. பின்தங்கிய உள்துறை மந்திரி!!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பரப்புரையானது மாநிலமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக பாஜக அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து நிற்பதால் டெல்லியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தமிழகத்தை நோக்கி வருகை புரிந்த வண்ணமாகவே உள்ளனர்.மூத்த தலைவர்கள் அனைவரும் இங்கு உள்ள வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆனால் இது கோவை மாவட்டத்திற்கு மட்டும்தான் கை கொடுத்தது என்று கூறலாம், சென்னையில் ரோடு ஷோ நிகழ்ச்சியானது பாஜக விற்கு சற்று அதிருப்தியை தான் ஏற்படுத்தியது.
ஏனென்றால் அதிக அளவில் கூட்டம் கூடாததால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இதனை முடித்துக் கொண்டனர்.அது மட்டுமின்றி இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ஃப்ளாப்பானதை கொண்டு பல கட்சிகளும் கேலிக் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இதனையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரையில் ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக இருந்தது.ஆனால் தற்காலிகமாக இந்த நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டுள்ளது.சிவகங்கையில் போட்டியிடும் தேவநாதன் மீது பண மோசடி வழக்கு உள்ளதால் தற்பொழுது ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.ஆனால் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியே பயங்கர ஃப்ளாப் ஆனதால் இதனையும் ரத்து செய்ததாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.