Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை சௌந்தர்யாவை கொன்னுட்டாங்க!.. நடிகர்தான் காரணம்.. பீதி கிளப்பிய கடிதம்!..

soundarya

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்தார். கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலருடனும் நடித்தார்.

ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் இறங்கிய போது பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ம் வருடம் தேர்தலின் போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தற்காக பெங்களூரிலிருந்து கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்தில் சிக்கி அவரும், அவருடன் சென்ற அவரின் சகோதரரரும் மரணமடைந்தனர்.

இந்நிலையில், சௌந்தர்யாவின் மரணத்திற்கு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவே காரணம் என சொல்லி ஆந்திர அரசுக்கு சிட்டி பாபு என்பவர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஹைதராபாத் ஷாம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் 6 ஏக்கர் நிலத்தில் ஒரு விருந்தினர் மாளிகையை சௌந்தர்யா காட்டியிருந்தார். அதன் தற்போதைய மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்கும். அந்த மாளிகையை தனக்கு விற்கும்படி மோகன்பாபு சௌந்தர்யாவிடம் கேட்டார். ஆனால், அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டார். இதனால் மோகன்பாபு கோபமடைந்தார். அதை மனதில் வைத்தே திட்டமிட்டே சௌந்தர்யாவும், அவரின் சகோதரரும் கொலை செய்யப்பட்டனர் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

mohan babu

மேலும், சௌந்தர்யா இறந்தபின் அந்த மாளிகையை மோகன்பாபு மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். எனவே, ஆந்திர அரசு அந்த மாளிகையை கையகப்படுத்த வேண்டும். மோகன் பாபுவின் இளையமகன் மஞ்சு மனோஜிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மோகன் பாபு விளக்கமளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் விளக்கத்தை பொருத்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version