ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்!

0
117

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி
நிதித்துறை விளக்கம்!

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.அரசு ஊழியர்கள் ஓய்வுதியம் பெற வேண்டுமென்றால் அவர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியம் குறித்து,கடந்த 17ஆம் தேதி கருவூலக் கணக்கு அதிகாரி சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பினார். அதில் கூறியுள்ளதாவது:

ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கிலிருந்து ஆறுமாதங்கள் எந்தவித பண பரிவர்த்தனையும் நடைபெறாமல் இருந்தால் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கி,ஓய்வூதியம் செலுத்தும் அதிகாரியிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும்,அவ்வாறு ஆறு மாத காலங்களாக பணம் எடுக்காதவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவதை நிறுத்தி வைக்கப்படும் என்றும், மேலும் ஓய்வூதியம் பெற வேண்டுமென்றால் வாழ்வு சான்றிதழை கருவூலத்திற்கு வந்து சமர்ப்பிக்க வேண்டுமென்றும், அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் பென்ஷன் நிறுத்தம் குறித்து விளக்கம் அளித்துள்ள நிதித்துறை,
பென்சன் நிறுத்தம் என்று வந்த தகவல் உண்மை இல்லையென்று கூறியுள்ளது.இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் நபரிடம் வாழ்வு சான்றிதழ் கேட்பது வழக்கமான நடைமுறைதான் என்றும், வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க யாரும் கருவூலம் வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் நிதித்துறை அறிவித்துள்ளது.