எனக்கு பணம் தான் முக்கியம்.. ஆண்டவருக்கு டாட்டா காட்டிய சூப்பர் ஸ்டார்!!
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 அன்று வெளியான படம் ஜெயிலர்.இப்படத்தில் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.இவருடன் மோகன்லால்,சிவ ராஜ்குமார்,ஜாக்கி ஷெராப்,சுனில்,தமன்னா,ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு,விநாயகன்,வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்.
உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதுவரை 635 கோடி வசூல் செய்து தமிழ் திரைத்துறையில் சாதனை படைத்துள்ளது.இதனால் சன் பிச்சர்ஸ் நிறுவனம் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் தனது 170 படத்தை நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் கோவிட் தொற்று பரவலுக்கு முன்பு ரஜினி,லோகேஷ் கூட்டணியில் நடிகர் கமல் தயாரிப்பில் புதிய படம் உருவாக இருப்பது உறுதியானது.ஆனால் சில காரணங்களினால் இப்படம் தள்ளி போகவே பிறகு லோகேஷ் மற்றும் கமல் கூட்டணியில் “விக்ரம்” படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ரஜினி,லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தலைவர் 171 படம் உருவாகப் போகிறது என்ற தகவல் உறுதியாகிவிட்டது.ஆனால் இதில் சிறு மாற்றம்.கமல் தயாரிக்க இருந்த இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் ஜெயிலர் வெற்றி என்று சொல்லப்படுகிறது.லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணி இணைந்தால் ஆயிரம் கோடி வசூல் உறுதியாகி விடும் என்பதால் இப்படத்தை தாங்கள் தயாரிக்கிறோம்.நீங்கள் கேட்கின்ற சம்பளத்தை தருகிறோம் என்று சூப்பர் ஸ்டாரிடம் சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆசை காட்டியுள்ளது.ரஜினியும் வேறு வழி இல்லாமல் இதற்கு ஒப்புக்கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.இந்த தகவல் அறிந்த சிலர் ஆண்டவருக்கே சூப்பர் ஸ்டார் டாட்டா காட்டி விட்டார் என்று தற்பொழுது கூறி வருகின்றனர்.