Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!

 

 

மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் தாமரை மணிமாலையும் ஒன்று. லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய பணவரவை கொடுக்கக்கூடிய தாமரைமணிகளை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் பொருட்கள் பல மடங்காக பெருகும். உதாரணத்திற்கு, தாமரை மணிகளை பீரோவில் வைத்தால் பணம் அதிகரிக்கும்.சமையலறையில் வைத்தால் வீட்டில் தன தானியத்திற்கு குறைவிருக்காது.குழந்தைகளின் புத்தகப் பையில் வைத்தால் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.பர்ஸில் வைத்து கொண்டால் பணம் வருவதும் போவதுமாக இருக்கும்.ஜாதகப் பையில் தாமரைமணியை வைத்தால் திருமணம் கைகூடி வரும்.இப்படி எல்லா நல்ல விஷயத்திற்கும் இந்த தாமரை மணிமாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள், வருமானம் இல்லை என்று கருதப்படுபவர்கள் தாமரை மணிமாலையை பயன்படுத்துவதன் மூலம் பணப்பிரச்சனைகள் படிப்படியாக குறையும் என்பது நம்பிக்கை.

 

தாமரை மணிமாலையை பயன்படுத்தும் முறைகள் பின்வருமாறு,காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.தாமரை மணிமாலையை சுபநிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அணிந்து கொள்வது சிறப்பு. மேலும் அசைவம் சாப்பிடும்போதும், அசுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போதும் தவிர்த்து கொள்வது நல்லது.

இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது நல்லது.தாமரை மணிமாலை நூலில் கோர்க்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளவும்.மாதம் ஒருமுறை சுத்தமான வேப்பெண்ணெயில் நனைத்த துணியை வைத்து துடைத்து வெயிலில் வைத்து உலர்த்தி பயன்படுத்தவும். வேப்பெண்ணெய் பயன்படுத்துவதால் எறும்புகள் மற்றும் பூச்சுகள் அடிக்காமல் பாதுகாக்கும்.தாமரை மணிமாலை வீட்டில் இருந்தால் ஏற்படும் பயன்கள் பணம் ஈர்க்கும் சக்தியாகவும், பொருளாதாரத்தில் மேம்படவும் உதவுகிறது.இந்நிலையில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்.பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது.வேலை கிடைப்பதில் தொடர்ந்து தடை. வியாபாரத்தில் தேக்க நிலை.தீராத கடன் பிரச்சனை.தேவையற்ற பணவிரயம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.இந்த தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்களும் அங்கு அதிகளவில் ஏற்படும் என்பது ஐதீகம்.

 

Exit mobile version