Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை சுக்கிர ஓரையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். இதனை தவறவிட்டால் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் செய்ய தவறினால் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பூஜையை சரியாக செய்யும் பொழுது பணத்தின் வரவு அதிகரிக்கிறது.

இந்தப் பரிகாரத்தை செய்வதற்கு முதலில் 20 மொச்சை பயிறை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சதுரவடிவ வெள்ளை துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மொச்சை பயிறுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அவற்றை குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

மொச்சை பயறு குழையாமல் வேக வைக்க வேண்டும். பின்னர் மொச்சைப்பயிறு நன்றாக ஆறியதும், இதனை ஒரு வெள்ளை துணியில் வைத்து லேசாக ஒரு முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மொச்சைப் பயிறு மூட்டையை கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி மனதார வேண்டிக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும் என்று ஐதீகம் கூறுகிறது.

Exit mobile version