Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீவிரமாகப் பரவி வரும் குரங்கு அம்மை! தமிழக அரசுக்கு வந்த திடீர் அலர்ட்!!

monkey-measles-spreading-seriously-alert-given-by-ttv-dhinakaran-to-tamil-nadu-government

monkey-measles-spreading-seriously-alert-given-by-ttv-dhinakaran-to-tamil-nadu-government

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு புதிதாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனமானது உலகத்தையே அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் குறித்து சர்வதேச பொது அவசர நிலையை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளிலும் எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கையினை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் முன்வைத்துள்ளார். அதில் பாகிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நிறைய நாடுகளில் உள்ள மக்கள் குரங்கு அம்மை நோய்த் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் குறித்த எச்சரிக்கையினை கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், தமிழ் நாட்டிற்குள் குரங்கு அம்மை நோய்த் தொற்றினை நுழைய விடக் கூடாது போன்ற கோரிக்கைகளை டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் உடனடியாக தமிழக அரசானது தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கோரிக்கையில் டிடிவி தினகரன் அவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் உயிரைக் கொல்லும் குரங்கு அம்மை நோய்த் தொற்றின் ஆபத்து குறித்து தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்துமாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version